Saturday, September 13, 2014

எங்கள் வாழ்க்கை(ஈழம்)

இழப்பதற்கு ஒன்றும் இல்லை
என்று தெரியும் முன்னரே தொடங்கி விட்டது என் வாழ்க்கை
சின்ன சின்ன சந்தோசங்களும்
வாலிப வயதின் உல்லாசங்களும்
தெருவில் போட்ட சண்டைகளும்
கற்றறிந்த கல்வியையும் தாண்டி
மண்ணை நோக்கி என் மனது பயணிக்கும் போதெல்லாம் எண்ணிக்கொள்கிறேன் -
ஈழத்தில் பிறந்த எந்த குழந்தையையும் அதன் அன்னை கேட்பதில்லை நீ என்ன ஆகபோகிறாய் என்று- ஏனெனில்
அவளுக்கு தெரியும்
கைகளில் ஆயுதம் சுமப்பான்
களத்திலே இறப்பான் - இல்லையேல் எங்காவது அகதியாய் இருப்பான.்.....
விடியும் என்ற நம்பிக்கையில் வடுவோடு காத்திருந்தவர்களில் நானும் ஒருவன் .....
மழைக்கு ஒதுங்கியவன்
மழை வரும் வேளைகளில் மட்டும் அழுகிறேன் எனக்கு யாரும் ஆறுதல் சொல்ல கூடாது என்பதற்காக :'.( .....
மழையை மட்டும் விரும்பி
இந்த உலகத்தையே வெறுக்கிறேன்
நாங்கள் அழுததை வேடிக்கை மட்டும் பார்த்து விட்டு
பலர் கோசம் போட்டனர்
சிலர் வேஷம் போட்டனர்
உறங்கி எழுந்ததும் மறந்த கனவாகி போனது எங்கள் வாழ்க்கை 

No comments:

Post a Comment

Followers