கனவுகள் எல்லாம் பொய் என்று உணர்ந்து இருந்தேன்
நீ வந்த கனவுகள் மட்டும் மெய்யாக வேண்டும் என்று தவமிருந்தேன்
நடு இரவில் எழுந்து, நீ வந்த கனவுகளை
வெற்று காகிதத்தில் கிறுக்கல் களால் நிரப்பினேன்
விடிந்ததும் கிறுக்கல்கள் கவிதைகளாய் மாறிய மாயம் என்ன?
நீ வந்த கனவுகளை மட்டும் நான் யாரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை
என் உள்ளேயே புதைத்து விடுகிறேன்
அது மீண்டும் மரமாகி கனவுகளாய் பூக்க வேண்டும் என்பதற்காக......
வ. வசந்த ரூபன்