Friday, January 23, 2015

நிலவே என் நிலவே ...


பெண்ணை தீண்டாத கவிஞன் உண்டு
உன்னை தீண்டாத கவிஞன் உண்டா ?
வார்த்தைகள் கொண்டு பாலம் அமைத்து
வானத்தில் உஞ்சலாட நானும் வரவா ?
வானவில் தொட்டு வந்து
தேன்நிலவே உன்னில் தேய்த்து
வெண்ணிலவே உன்னை
வண்ண நிலவாக மாற்றவா ?
மேகம் அள்ளிக்குடித்து நம்
தாகம் தணிப்போம ?
வடை சுடும் பாட்டியின்
கடை சென்று நம்
பசி தீர்ப்போம ?
வாடகை தராத வடை சுடும் பாட்டியின்
கடையை உடைப்பதாய்
வம்பு இழுப்போம ? - உன்னிடம்
விடை பெற முடியாமல் நடை பயில்கிறேன்
வீடு வரை வந்து செல்லு வான் நிலவே ....

தமிழரின் தாகம், தமிழ் ஈழ தாயகம் ..........




அடக்குமுறை பிடிக்காதவன்
யாருக்கும் அடங்காதவன்
சாதி மதங்களை உடைத்தவன்
சாவுக்கே வரம் கொடுத்தவன்
சூழ்சிகள் தெரியாதவன்
வீழ்ச்சிகள் விரும்பாதவன்
அறநெறி கொண்டு
பகைவரை வென்று
சுயநலம் கொன்ற தலைவா
வீர மறவா
நீ எப்போது வருவாய் ?
சிறகுகள் இல்லாத பறவைகளாய்
அகதிகளாய் வாழும் தமிழ் ஈழ உறவுகளே ....
எங்கோ ஒரு முலையில் வாழ்ந்து
இறந்து விட துணிந்து விட்ட ஏழறிவு மனிதர்களே ....
தமிழருக்கு தனி ஈழம் அமைக்க
தனி மனிதனாய் போராடிய தலைவரின் தியாகம் ...
என்றென்றும் நெஞ்சில் ஆறாத காயம் ...
தமிழரின் தாகம்
தமிழ் ஈழ தாயகம் ..........

Followers