Sunday, October 11, 2015

போராட்டம்

பின்னிரவல் நின்றது மின்சாரம்
காதருகே கொசு பாடியது ரிங்காரம் 
இடைவிடாமல் ஓடி இசை மீட்டியது கடிகாரம் 
இமை மூட முடியாமல் அறைக்கதவை திறந்தேன்.. அதிர்ந்தேன்... 
அது இடியும்; மழையும் போட்டி போட்டதால் வந்த விவகாரம்
அடுத்தநாள் போடவைத்திருந்த பள்ளி உடை காற்றில் பறந்து மழையில் நனைந்து கொண்டிருக்க
உடல் நனைந்து உடையை எடுக்க மழையோடு போராடிக்கொண்டிருந்தான்
அடுத்த வீட்டு குடிசை மாணவன்
போராட்டம் என்னவோ மழைக்கும் அவனுக்கும் தான்
தோற்றது மட்டும் நான் கையில் ஒளியுடன் கதவோரத்தில் வேடிக்கை பார்ப்பவனாய்.... 


https://www.facebook.com/photo.php?fbid=978635715492420&set=a.152892938066706.27456.100000380028545&type=3&theater

பாவப்புத்தகம்

எமதர்மனுக்கும், சித்ரகுப்தனுக்கும் வேலை குறைந்துவிட்டது...

அவர்கள் இப்பொழுது பாவகணக்குகளை எழுதுவதில்லை...

ஏன் என்றால் ஒவ்வொரு மனிதன் கையிலும் mobile என்ற பாவப்புத்தகம்...

Thursday, July 23, 2015

உன் விழி பேசும் மொழி என்ன பெண்ணே ?

இமை மூடி என்னை இழுக்கிறாய் 
வா என்று அழைக்கிராயோ!
இதழ் சுழித்து கண் சிவக்கிறாய் 
கோபமாய் இருக்கிறாயோ!
கருவிழி சுற்றி உன் முகம் மறைக்கிறாய்
நண்பிகள் பக்கம் இருக்கிறார்களோ!
கரும்கூந்தால் கொண்டு விழி மறைக்கிறாய்
வெட்கம் கொண்டாயோ!
உன் விழி பேசும் மொழி தெரிய வேண்டும்- ஏன் என்றால்
உன் இதழ் பேசும் மொழி எனக்கு தெரியாது
எனக்கு தமிழ் மட்டும்தான் தெரியும் frown emoticon


Saturday, May 9, 2015


அம்மா...
வார்த்தைகள் கொண்டு அலங்கரிக்க
முடியாத கவிதை அம்மா...
வானத்து தேவதை பூமியில்
வாழும் என்றால் அது அம்மா...
வாழும் நாள் முழுதும் என் நலன் காத்தாய்...
வலி என்று சொல்லும் முன் என் வலி உணர்ந்தாய்...
சிறு முள் என் கால் கிழித்ததும்
வலியால் நீதான் துடித்தாய்...
வலியவன், உயர்ந்தவன் எவன் என்னை தீண்டினாலும்
அரணாய் வந்து தடுத்தாய்...
தெய்வங்கள் தேடி கோவில் சென்றாய்...
என்னையும் கூட்டிசென்று கும்பிடு என்றாய்...
நீ காட்டிய கல் என் தெய்வம்
நீ காட்டிய மனிதர்கள் என் உறவுகள்
நீ காட்டிய உலகம் என் உலகம்
நீ யார்?
நான் உணர்ந்த ஒரே தெய்வம் நீதான் அம்மா...
                                                                                      வ. வசந்த ரூபன் 

Friday, February 20, 2015

தொலைபேசி

தொலைவில் இருந்தும் தொல்லை தந்தாய்
தொலைபேசி நீயடி...
அலைகள் வழியே அலைந்து திரிந்தாய்
அலைபேசி நீயடி...

எண்ணமும், எழுத்தும் உனதானது
உன் வண்ண நினைவே வரமானது
துன்பமும், துயரமும் தூரமானது
இன்பம் தாங்கி நெஞ்சே ஈரமானது
                                        (தொலைவில்...)
காலை, மாலை வேலை மறந்தேன்
உன் தேவை மட்டுமே நானும் உணர்ந்தேன்
இந்த உலகம் முழுவதும் நீயடி நிறைந்தாய்
என் காலடி நெருங்கையில் ஏனடி மறைந்தாய்?
                                         (தொலைவில்...)



Friday, January 23, 2015

நிலவே என் நிலவே ...


பெண்ணை தீண்டாத கவிஞன் உண்டு
உன்னை தீண்டாத கவிஞன் உண்டா ?
வார்த்தைகள் கொண்டு பாலம் அமைத்து
வானத்தில் உஞ்சலாட நானும் வரவா ?
வானவில் தொட்டு வந்து
தேன்நிலவே உன்னில் தேய்த்து
வெண்ணிலவே உன்னை
வண்ண நிலவாக மாற்றவா ?
மேகம் அள்ளிக்குடித்து நம்
தாகம் தணிப்போம ?
வடை சுடும் பாட்டியின்
கடை சென்று நம்
பசி தீர்ப்போம ?
வாடகை தராத வடை சுடும் பாட்டியின்
கடையை உடைப்பதாய்
வம்பு இழுப்போம ? - உன்னிடம்
விடை பெற முடியாமல் நடை பயில்கிறேன்
வீடு வரை வந்து செல்லு வான் நிலவே ....

தமிழரின் தாகம், தமிழ் ஈழ தாயகம் ..........




அடக்குமுறை பிடிக்காதவன்
யாருக்கும் அடங்காதவன்
சாதி மதங்களை உடைத்தவன்
சாவுக்கே வரம் கொடுத்தவன்
சூழ்சிகள் தெரியாதவன்
வீழ்ச்சிகள் விரும்பாதவன்
அறநெறி கொண்டு
பகைவரை வென்று
சுயநலம் கொன்ற தலைவா
வீர மறவா
நீ எப்போது வருவாய் ?
சிறகுகள் இல்லாத பறவைகளாய்
அகதிகளாய் வாழும் தமிழ் ஈழ உறவுகளே ....
எங்கோ ஒரு முலையில் வாழ்ந்து
இறந்து விட துணிந்து விட்ட ஏழறிவு மனிதர்களே ....
தமிழருக்கு தனி ஈழம் அமைக்க
தனி மனிதனாய் போராடிய தலைவரின் தியாகம் ...
என்றென்றும் நெஞ்சில் ஆறாத காயம் ...
தமிழரின் தாகம்
தமிழ் ஈழ தாயகம் ..........

Followers