Monday, November 3, 2014

மந்திரக்காரி

உன் பார்வையில் இருந்து விலகும் வரை புவிஈர்ப்பு  விசை அற்ற மாய உலகத்தில் அடைத்து விடுகிறாய்

உணர்ச்சியற்ற மரம்போல உனது
மூச்சுக்காற்றில் என் தலையை  அசைத்து  விடுகிறாய்

எனது அனுமதி இன்றி என் கண்கள் உன்னை பார்க்கின்றது

உன் அங்க அசைவுகள் தாங்காது உடலில் வேர்வை பூக்கின்றது

விலகும் போது வலியை நெஞ்சில் தூவுகிறாய்

விதையே இன்றி மரமாய் மனதில்
வாழுகின்றாய்

Followers