Tuesday, February 19, 2019

தனிமை காதலி


தலையணை தனிமை கண்டு என்னோடு கதைக்கின்றது
போர்வையோ தானாக மூடி என்னை  அணைக்கின்றது
கைபேசி கவிபாடி  காலையில் என்னை எழுப்புகின்றது
சுடுநீர் ஏற்றியோ இதமான நீர் தந்து என்னை நனைக்கின்றது
வெளியே செல்லும்போது என் பிரிவை தாங்காத தனிமை காதலி

என் வரவிற்காக காத்திருக்கிறாள்...

Sunday, September 11, 2016

காதல்


சீரிய யாழின் ஒலி போல 
கூரிய வாளின் நுனி போல 
உன் காதல் கணை பாய்ந்து வர,
கவசம் இழந்த கர்ணன் போல் உன் முன்னே நின்றேனடி.....

Saturday, July 2, 2016

கிறுக்கல்

கிறுக்கல்களால் முகம் மறைத்தாய் 
கிறுக்கனாய் அலைய வைத்தாய்... 
வலிமையும், இனிமையும் கலந்த குரல் கொண்டாய் 
வாலிப கனவிலே நீதானே வந்து சென்றாய்...
பிறை நிலவாய் முகம் மறைத்து என்னை ரசிப்பது ஏனடி 
என்னை சிறை பிடிக்க வந்த இறை மகளும் நீயோடி...

Friday, April 15, 2016

நீ வந்த கனவுகள்


கனவுகள் எல்லாம் பொய் என்று உணர்ந்து இருந்தேன்
நீ வந்த கனவுகள் மட்டும் மெய்யாக வேண்டும் என்று தவமிருந்தேன்

நடு இரவில் எழுந்து, நீ வந்த கனவுகளை
வெற்று காகிதத்தில் கிறுக்கல் களால் நிரப்பினேன்
விடிந்ததும் கிறுக்கல்கள் கவிதைகளாய்  மாறிய மாயம் என்ன?

நீ வந்த கனவுகளை மட்டும் நான் யாரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை
என் உள்ளேயே புதைத்து விடுகிறேன்
அது மீண்டும் மரமாகி கனவுகளாய்  பூக்க வேண்டும்   என்பதற்காக......
வ. வசந்த ரூபன் 

Saturday, February 13, 2016

தவிப்பதும் துடிப்பதும் என் மனம் அல்லவா....


ஒரு முறை சிரிப்பதும்
மறுமுறை முறைப்பதும்
நீ என்னை வெறுப்பதும் 
தவறல்லவா....
தினம் உன்னை நினைப்பதும்
தனிமையில் தவிப்பதும்
வலிதனில் துடிப்பதும்
நானல்லவா....
உயிரே உயிரே
என் உள்ளம் வந்த பயிரே
என்னைக் கொல்லும் உளியே
என் விழியே....
நிலவே நிலவே
என் வாசல் வந்த நிலவே
என்னை வீசி சென்ற சகியே
இது சரியோ..
வீசி செல்லாதே - என்னை
விட்டுச் செல்லாதே
என் சின்ன உயிர் தாங்காதே....
நினைவிலே இனிப்பதும்
நியத்திலே கசப்பதும்
கண்ணீரில் மிதப்பதும்
என் விழியல்லவா....
வெறுப்பதால் நினைப்பதும்
நினைப்பதால் உன்னை மறக்க மறுப்பதும்
தவிப்பதும் துடிப்பதும்
என் மனம் அல்லவா....

Sunday, October 11, 2015

போராட்டம்

பின்னிரவல் நின்றது மின்சாரம்
காதருகே கொசு பாடியது ரிங்காரம் 
இடைவிடாமல் ஓடி இசை மீட்டியது கடிகாரம் 
இமை மூட முடியாமல் அறைக்கதவை திறந்தேன்.. அதிர்ந்தேன்... 
அது இடியும்; மழையும் போட்டி போட்டதால் வந்த விவகாரம்
அடுத்தநாள் போடவைத்திருந்த பள்ளி உடை காற்றில் பறந்து மழையில் நனைந்து கொண்டிருக்க
உடல் நனைந்து உடையை எடுக்க மழையோடு போராடிக்கொண்டிருந்தான்
அடுத்த வீட்டு குடிசை மாணவன்
போராட்டம் என்னவோ மழைக்கும் அவனுக்கும் தான்
தோற்றது மட்டும் நான் கையில் ஒளியுடன் கதவோரத்தில் வேடிக்கை பார்ப்பவனாய்.... 


https://www.facebook.com/photo.php?fbid=978635715492420&set=a.152892938066706.27456.100000380028545&type=3&theater

Followers